பெரம்பலூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணிகளை தேர்வெழுதிய பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் கொண்டுவர வேண்டும்.
ஜூலை 18 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் நாள்களில் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாள் பதிவுமூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், வேலைவாய்ப்புத்துறை இணையம் வழியாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாமல் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment