'ரேஷன் கடைகள், இன்று, வழக்கம் போல் செயல்படும்' என, ரேஷன் கடை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வருவாய் துறை, வணிக வரி, சத்துணவு துறை உள்ளிட்ட பல துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ரேஷன் ஊழியர்கள், இன்று முதல், வேலை நிறுத்தம் செய்ய போவதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று வழக்கம் போல், கடைகளை திறக்க இருப்பதாக ரேஷன் ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
சமீப காலமாக, ரேஷன் கடைகளுக்கு, முழு அளவில் பொருட்கள் வழங்காததால், அனைத்து மக்களுக்கும் வழங்க முடியவில்லை. தேர்தலை முன்னிட்டு, தற்போது தான் ஓரளவிற்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இன்று, வழக்கம் போல், ரேஷன் கடைகள் செயல்படும். ராஜேந்திரன்தமிழக அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க தலைவர்
No comments:
Post a Comment