அரசு ஊழியர் சங்கத்தின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மறியலில் ஈடுபட்ட, 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்படும், இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். எனினும், அவர்களின் கோரிக்கைகளுக்கு, அரசு செவி சாய்க்காததால், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், நேற்று மறியலில் ஈடுபட்ட, 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். பெரும்பாலான அரசு துறைகளில், ஒட்டுமொத்தமாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அரசு ஊழியர்களை திருப்திபடுத்தும் வகையில், இன்று தாக்கலாகும், மாநில அரசின் இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே, மூத்த அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. 'உங்கள் கோரிக்கை நியாயமானது; முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பிப்., 11க்குள் தீர்வு சொல்கிறோம்' எனக் கூறியும், இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை.பிரச்னை, முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கும். இன்று துவங்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், எங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். அறிவிப்புகள் வெளியானால், போராட்டம் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய கோரிக்கைகள் என்ன?
* புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்
* ஓய்வுபெற்ற மற்றும் இறந்த ஊழியர்களின், 7,000 குடும்பங்களுக்கும் பணப் பயனைஉடனே வழங்க வேண்டும்
* ஓய்வுபெற்ற மற்றும் இறந்த ஊழியர்களின், 7,000 குடும்பங்களுக்கும் பணப் பயனைஉடனே வழங்க வேண்டும்
* சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட, தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
* அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
* அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
சங்கங்கள் சொல்வது என்ன?
'அரசுக்கு வருவாய் இழப்பு'
''ஊழியர்கள் நலனை விட, வணிக வரித்துறை நலன் சார்ந்த, 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 'நியாயமானது' என, அரசு கூறினாலும், 13 நாட்கள் போராட்டம் நீடித்தும், ஊழியர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்ளாதது வேதனை அளிக்கிறது. இது, அரசின் வரி வருவாய் இழப்புக்கு வழி வகுக்கும். அரசின் அலட்சியம், ஊழியர்களிடம் மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது; அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.
- எஸ்.ஜனார்த்தனன்,
மாநிலத் தலைவர், வணிக வரித்துறை சங்க கூட்டமைப்பு
- எஸ்.ஜனார்த்தனன்,
மாநிலத் தலைவர், வணிக வரித்துறை சங்க கூட்டமைப்பு
'தீவிரப்படுத்துவோம்
' ''சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் என்பது, நீண்ட கால கோரிக்கை. அரசு செவி சாய்க்காததால், 80 சதவீத சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர். மையங்களின் பூட்டை உடைத்து, சத்துணவு வழங்கும் அரசின் முயற்சி தோல்வி அடைந்து விட்டது. குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்காமல் தவிக்க வைப்பது எங்கள் நோக்கம்அல்ல; அரசின் அலட்சியமே காரணம். இன்று முதல், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.
-பே.பேயத்தேவன்,
மாநில பொதுச்செயலர், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் சங்கம்
-பே.பேயத்தேவன்,
மாநில பொதுச்செயலர், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் சங்கம்
'எல்லாம் அரசின் கையில்'
''கோரிக்கைகளை அரசிடம் பலமுறை எடுத்துச் சொன்னோம்; போராட்டங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தினோம். பேச்சில் ஏற்ற கோரிக்கைகளைக்கூட, அரசுசெயல்படுத்தாமல் ஏமாற்றியதால், இன்று, வருவாய்த்துறை பணிகள் முடங்கி, மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தல் பணி, ஆதார் அட்டை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது அரசின் கையில் தான் உள்ளது.
- டி. சிவஜோதி, மாநில பொதுச்செயலர், வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
'பொறுமை இழந்தோம்'
''ஓராண்டாக தொடர் போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காததால், பொறுமை இழந்து ஸ்டிரைக்கில் ஈடுபடும் நிர்ப்பந்தம் வந்துள்ளது. 25 ஆயிரம் ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். ஜாக்டோவில் உள்ள அனைத்து சங்கங்களும் தீவிர போராட்டத்தில் இறங்கும். அரசு கோரிக்கைகளை ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
- பாலசந்தர்,
பொதுச்செயலர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
- பாலசந்தர்,
பொதுச்செயலர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
'பெயரளவில் தான் பேச்சு'
ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தியும், கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற அரசு முன்வரவில்லை; பெயரளவில் பேச்சு நடத்தி ஏமாற்றி விட்டனர். எனவே, ஸ்டிரைக்கில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டும், எங்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
- கே.பி.ஓ.சுரேஷ்,
மாநிலத் தலைவர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம்
- கே.பி.ஓ.சுரேஷ்,
மாநிலத் தலைவர், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம்
No comments:
Post a Comment