ராமநாதபுரம்:தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டிற்கு, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அரசு பள்ளி ஆசிரியர் ஆர்.வெங்க டேசனின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.
மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், ஆண்டுதோறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்களுக்கு ஆய்வு கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 'செய்முறைகள் செய்து அறிவியல் கற்றல்' தலைப்பில் 'ஆன்லைனில்' போட்டி நடத்தப்பட்டது.தமிழகத்தில் இருந்து 6 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் ராமநாதபுரம் அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேசனின் 'வீணான பொருட்களை பயன்படுத்தி அறிவியல் பாடத்தில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துதல்' கட்டுரையும் தேர்வானது. இந்த கட்டுரையை அவர் டிச., 17 முதல் டிச., 19 வரை
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க உள்ளார்.வெங்கடேசன் கூறியதாவது: மாணவர்களே எளிதில் தயாரிக்கும் வகையில் வீணான பொருட்கள் மூலம் அறிவியல் செய்முறை உபகரணங்களை தயாரிப்பது குறித்து,
கட்டுரையில் தெரிவித்தேன். ஆசிரியராக பணியில் சேர்ந்த 15 ஆண்டுகளில் 36 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைக்க உதவினேன்.எனக்கு 'தினமலர்' 2013 லட்சிய ஆசிரியர் விருது, ஏர் இந்தியாவில் 'போல்ட்' விருது கிடைத்துள்ளன, என்றார்.அவரை பள்ளி தலைமைஆசிரியர் கிஷோர், உதவி தலைமைஆசிரியர் மகேந்திரன் பாராட்டினர்.
No comments:
Post a Comment