சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்காக, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக்
காட்டுவோம்' நிகழ்ச்சி, இன்று நடைபெற உள்ளது.சென்னை பல்கலைக் கழகத்தில், காலை, 8:30 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், கணித ஆசிரியர் பவானி; அறிவியல் ஒன்று - ஆசிரியர் ரேகா யஷ்வந்த்; அறிவியல் இரண்டு - ஆசிரியர் சாந்தி பிரபுராம்; ஆங்கில ஆசிரியர் முனிராமையா; சமூக அறிவியல் ஒன்று - ஆசிரியர் ரஜினிபால்; சமூக அறிவியல் இரண்டு - ஆசிரியர் சந்திரகலா; தமிழாசிரியை சுப்புலட்சுமி ஆகியோர், பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுப்பது எப்படி என விளக்க உள்ளனர்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, 'தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்வது எப்படி?' என, விளக்க உள்ளார்.
பகல், 1:00 மணிக்கு, பிளஸ் 2அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி நடைபெறும். இயற்பியல் ஆசிரியர் கோபி ஆனந்த்; வேதியியல் ஆசிரியர் சரவணன்; கணித ஆசிரியர் ராஜ்; கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர் ரமேஷ்; உயிரியல் ஆசிரியர் சேகர், ஆகியோர், ஒவ்வொரு பாடத்திலும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் வழிமுறையை விளக்குவர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய வழிமுறைகளை விளக்க உள்ளார். காலை மற்றும் மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில், 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, கடந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி, வாழ்த்துரை வழங்க உள்ளார்.
No comments:
Post a Comment