மதுரை: தகவல் உரிமை சட்டப்படி நுகர்வோர் ஒருவர் கேட்ட பல கேள்விகளுக்கு, ஒரே ஒரு வரியில் பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய சாதனை படைத்தனர்.
மதுரை சத்யசாயிநகர் பி.பிரேம் ஆனந்த். இவர், 'பொதுத்தகவல் அலுவலர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை' என்ற விலாசத்திற்கு, 'தகவல் அறியும் உரிமை' சட்டப்படி 20 கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார்.
கேள்விகள்: தமிழகத்தில் மொத்த விவசாய நிலப்பரப்பு, நன்செய், புன்செய் நிலங்கள் எவ்வளவு, சாகுபடி செய்யும் பரப்பளவு, பாசனம் பெறும் நிலப்பரப்பு, மானாவரி நிலப்பரப்பு, விளை நிலங்களை அழித்து கல்குவாரிகளாக மாற்றப்பட்டுள்ள பரப்பளவு, கல்குவாரிகளால் அரசுக்கு கிடைக்கும் வருமானம், கட்டடங்களாக மாறியுள்ள வயல்களின் பரப்பளவு, விவசாயம் அழிந்து வரும் நிலையில் வேறென்ன தொழில்
முன்னேற்றம் காணப்பட்டுள்ளது, மாற்று தொழிலுக்கு மாறிய விவசாயிகளின் சதவீதம், விவசாயம், விவசாயிகள் மற்றும் பாசன பரப்பு குறைந்துள்ளதா, விவசாயம் குறைய காரணம் என்ன?கருவேல மரங்களை அழிக்க எடுத்துள்ள நடவடிக்கை, குறைந்த பரப்பளவில் அதிக உற்பத்தி செய்யப்படுகிறதா, மண் வளம் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, சிறு, குறு
விவசாயிகளின் தற்போதைய நிலை, விளை நிலங்களில் கட்டடங்கள் வர காரணம் என்ன, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டதா, இதில் அரசியல் குறிக்கீடு உள்ளதா, அரசியல் கட்சியினர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரா, எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர், நில அபகரிப்பு தனி போலீஸ் மற்றும் நீதிமன்றம் செயல்படுகிறதா போன்ற விவரங்களை கடந்த ஜூன் 27ல் கேட்டிருந்தார்.இக்கேள்விகளுக்கு பதிலளிக்க,
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, அரசு செயலர் அனுப்பினார். எந்த அதிகாரியும் நேரடியாக பதில் கூறவில்லை. உதாரணத்துக்கு, பெரியகுளம் மஞ்சளாறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் மா.சேகர் கடந்த செப்.,14ல் எழுதிய பதில் கடிதத்தில் '1 முதல் 16 வரை தகவல்கள்: இக்கோட்டத்திற்கு பொருந்தாது. 17 முதல் 19
தகவல்கள்: இக்கோட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 20வது தகவல்: இக்கோட்டத்திற்கு பொருந்தாது'.இப்படி 20 கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் தந்து, கேள்வி கேட்டவரை திக்குமுக்காட வைத்தார்.
பொதுவாக, தகவல் அறியும் உரிமை சட்டப்படி நுகர்வோர் கேட்கும் பல தரப்பட்ட கேள்விகளுக்கு, அதிகாரிகள் பலரிடம் இருந்து உருப்படியான பதில் கிடைப்பது குதிரை கொம்புதான்.
Thagaval ketpavargal palar asking a lot of information that cannot be prepared by the officer in the specific period, so the officers facing a lot of disturbance in their daily works. Some people ask unneccesary information just to make problem to the officer. So, the people may ask one or two information in one time.
ReplyDelete