சென்னை:வெள்ளம் வடிந்த பின் மக்கள் பின்பற்ற வேண்டிய அம்சங்களை, பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. அதன் விவரம்:
* பாதுகாப்பான நிலை திரும்பும் வரை, வெள்ளம் வடிந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்
* ஆற்றங்கரைக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்
* வெள்ளம் புகுந்த கட்டடத்திற்குள் செல்லும் முன், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும்
* கட்டடத்தை சுற்றி அல்லது கட்டடத்தின் உள்ளே, வெள்ள நீர் இருந்தால், உள்ளே நுழையக்கூடாது
* கட்டட கட்டமைப்பில் விரிசல் மற்றும் சேதம் உள்ளதா என பரிசோதிக்கவும்
* கட்டடத்தில் உள்ள மின் இணைப்புகள், தரையில் இருக்கும் அடுப்புகள், பாய்லர்கள், 'காஸ்' சிலிண்டர், மோட்டார் பம்பு மற்றும் இதர மின் உபகரணங்களை, முறையாக சோதனை செய்ய வேண்டும்
* வடிகால் அமைப்பில் உடைப்பு ஏற்பட்டு இருந்தால், கழிப்பறை மற்றும் குழாய் தண்ணீர் உபயோகத்தை நிறுத்தி விடவும்
* கழிவுநீர் குழாய் அமைப்பில் சேதம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக சரி செய்வதன் மூலம், நோய் பரவுவதை தவிர்க்கலாம்
* கொடிய பூச்சிகள் மற்றும் விஷப் பாம்புகள், வீட்டிற்குள் புகுந்திருக்கலாம்; கவனமாக இருக்கவும்
* நீரில் நனைந்த மருந்துகள், உணவு, தண்ணீர் போன்ற வற்றை பயன்படுத்த வேண்டாம்
* மின் உபகரணங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால், மின் இணைப்பை உடனே துண்டிக்கவும்
* நீரை கொதிக்க வைத்து பருகவும்
* தாழ்வான மின் கம்பி அருகே செல்லக்கூடாது
* சேதமடைந்த குடிநீர் குழாய் வடிகால் அமைப்பு மற்றும் மின் இணைப்பு குறித்து, உரிய அதிகாரிகளிடம் புகார் செய்யவும்
* கட்டடத்திற்குள் வெளிக்காற்று புகுமாறு செய்வது நல்லது
* சேதமுற்ற கட்டடம் மற்றும் அனைத்து பகுதிகளையும், புகைப்படம் எடுக்கவும் (காப்பீடு இருந்தால் பெற உதவும்)
* சிறிய காயங்கள், நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது
* நனைந்த அனைத்து பொருட்களையும், சுத்தப்படுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கிருமி நாசினி பயன்படுத்தவும். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment