தேசிய ஓய்வூதியக் கொள்கையை ரத்து செய்யவேண்டும் என்று தேசிய ரயில்வே ஓய்வூதியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தச் சங்கத்தின் 26-ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எம்.உதயகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டி.சின்னுசாமி, நிர்வாக பொதுச் செயலாளர் எம்.தேவராஜ், பொருளாளர் ஜி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், 7-ஆவது ஊதியக் குழுவில் ரயில்வே ஓய்வூதியர்களுக்கான குடும்ப மருத்துவப் படியை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.தேசிய ஓய்வூதியக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தினருக்கு வழங்குவது போல ரயில்வே ஓய்வூதியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவச் செலவுத் தொகையை 3 மாதங்களுக்குள் திருப்பி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க உதவித் தலைவர் சாலமன் விக்டர், உதவிச் செயலாளர் எம்.சின்னுசாமி, ரயில்வே அதிகாரிகள் வாசுதேவன், மருத்துவர் அகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment