பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஜனவரி 11 முதல் 27-ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.
தொடர் மழை காரணமாக, டிசம்பரில் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகளும் ஜனவரி 11 முதல் நடைபெறும். இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு...
ஜனவரி 11 (திங்கள்கிழமை) - மொழிப்பாடம் முதல் தாள்.
13 (புதன்கிழமை) - மொழிப்பாடம் இரண்டாம் தாள்.
18 (திங்கள்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்.
20 (புதன்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
22 (வெள்ளிக்கிழமை) - கணிதம்.
25 (திங்கள்கிழமை) - அறிவியல்.
27 (புதன்கிழமை) - சமூக அறிவியல்.
இந்தத் தேர்வுகள் காலை 10 முதல் நண்பகல் 12.45 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.
12 ஆம் வகுப்பு...
ஜனவரி 11 (திங்கள்கிழமை) - மொழிப்பாடம் முதல் தாள்.
12 (செவ்வாய்க்கிழமை) - மொழிப்பாடம் இரண்டாம் தாள்.
13 (புதன்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்.
14 (வியாழக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
18 (திங்கள்கிழமை) - வணிகவியல், மனையியல், புவியியல்.
19 (செவ்வாய்க்கிழமை) - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயடட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, வேளாண் தொழில், அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்கல்வி), நர்சிங் (பொது), கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை.
21 (வியாழக்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள், சிவில் டிராப்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் இயந்திரங்கள், பொருள்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை.
23 (சனிக்கிழமை) - வேதியியல், கணக்குப் பதிவியல்.
25 (திங்கள்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்
27 ( புதன்கிழமை) - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, பிரதான மொழி (தமிழ்), புள்ளியியல்.
இந்தத் தேர்வுகள் காலை 10 முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment