மேல்நிலைப் பொதுத் தேர்வை (மார்ச், 2016) எழுதும் தனித்தேர்வர்கல் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அத்தேதிகளிலும் பெருமழை நீடித்ததால், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக இயலாமல் போன தனித்தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், அரசு சேவை மையங்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக விண்ணப்பிக்கலாம் என மண்டல அரசுத்தேர்வுகள் துறையின் திருச்சி மண்டலத் துணை இயக்குநர் வெ.முருகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment