சென்னையில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தவர்களுக்கு வரும் 14-ம் தேதி முதல் பள்ளிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்படுகின்றது.
கடந்த வாரம் பெய்த கனமழையில் சென்னை மாநகரத்தில் பெரும்பாலான புறநகர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஏரிகள் திறந்துவிடப்பட்டு, அருகில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்து நீரில் அடித்துச்செல்லப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு அதன் மாதிரி நகலை வழங்க டிசம்பர் 14-ம் தேதி முதல் 2 வாரங்களுக்குச் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகப் பள்ளி கல்வித்துறையின் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment