ஊட்டி: கோடநாடு எஸ்டேட்டில் செயல்பட்டு வந்த, அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி, திடீரென மூடப்பட்டது.நீலகிரி மாவட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, பல பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டில், பல ஆண்டுகளாக, நல்ல நிலையில் செயல்பட்டு வந்த, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ., ஆரம்பப்பள்ளி, திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இது குறித்து, நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., செயலாளர் பத்ரி கூறியதாவது:சி.எஸ்.ஐ., ஆரம்ப பள்ளியில், 35 தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வந்தனர். உரிய கட்டமைப்பு, போதிய வசதிகளுடன், பள்ளி கட்டடம் இருந்தது.திடீரென பள்ளி மூடப்பட்டு, கட்டாய மாற்றுச் சான்றிதழை வழங்கி, குழந்தைகளை, அருகேயுள்ள பான்காடு ஊராட்சி
ஒன்றியப் பள்ளிக்கு மாற்றி உள்ளனர். பெற்றோருக்கு எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.இந்த மாற்றத்தால், வனவிலங்கு அச்சுறுத்தல் அதிகமுள்ள பாதையில், 6 கி.மீ., துாரம் நடந்து செல்ல
வேண்டிய நிலை, குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. மூடிய பள்ளியை, திறக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மாணவர்கள் அனைவரும், மாற்றுச் சான்றிதழ் வாங்கிவிட்டதால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது. ஆசிரியர் இருவரை, சி.எஸ்.ஐ., நிர்வாகம், வேறு பள்ளிக்கு மாற்றி உள்ளது. மீண்டும், அப்பள்ளியில் மாணவர்கள் சேரும்பட்சத்தில், பள்ளி திறக்க வாய்ப்புள்ளது.
-பாலசுப்ரமணி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்.
No comments:
Post a Comment