சிவகங்கை: திருப்புவனத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.தலைமை ஆசிரியர் நல்லமுகமது துவக்கி வைத்தார். மானாமதுரை எம்.எல்.ஏ.,குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் மோகன் ஏற்பாட்டை செய்தார்.
வயது 11 பிரிவு: மாணவர் பிரிவில் சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்.,பள்ளி எஸ்.ரோஹித் முதலிடம், பொட்டகவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அஸ்வின் குமார் 2ம் பரிசு பெற்றார்.
மாணவிகள் பிரிவில் முதல் பரிசு சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்.,பள்ளி விஜயசுபஸ்ரீ, 2ம் பரிசு காளையார்கோவில் ஓ.எம்.ஜி., மெட்ரிக்., பள்ளி டெலிபின் ஜீவிதா.வயது 14 பிரிவு: மாணவர் பிரிவில் முதல் பரிசு சின்னகண்ணணூர் அரசு மேல்நிலைப்பள்ளி சி.மோகன், 2ம் பரிசு சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்.,பள்ளி பரணிதரன். மாணவிகள் பிரிவில் முதல் பரிசு சிவகங்கை ஜஸ்டின் மெட்ரிக்.,பள்ளி ஜாஸ்மின்மேரி, 2ம் பரிசு சின்னகண்ணணூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்மலாதேவி.
வயது 17 பிரிவு: மாணவரில் முதல் பரிசு சோழபுரம் சு.பா.தே.வி., பள்ளி கருணாகரபாண்டி, 2ம் பரிசு மானாமதுரை சி.எஸ்.ஐ., பள்ளி ஜடிலன். மாணவி பிரிவில் முதல் பரிசு வேலம்மாள் மெட்ரிக்.,பள்ளி நிகிதாஜோதி, 2ம் பரிசு சிவகங்கை ஜஸ்டின் மெட்ரிக்.,பள்ளி பவதாரணி. வயது 19 பிரிவு: மாணவரில் முதல் பரிசு திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளி எம்.அருண், 2ம் பரிசு சிவகங்கை 21ம் நூற்றாண்டு மெட்ரிக்., பள்ளி ஆகாஷ், மாணவி பிரிவில் முதல் பரிசு சூசையப்பர்பட்டணம் சகாயராணி மெட்ரிக்.,பள்ளி கப்ஷாகனி, 2ம் பரிசு வேம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி சிவரஞ்சனி பெற்றனர். கல்வி மாவட்ட செஸ் போட்டியில் முதல் 3ம் இடம் பிடித்த மாணவர்கள் செப்டம்பர் 2ம் தேதி ராமநாதபுரத்தில் நடக்கும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
No comments:
Post a Comment