புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அறிவியல் மையம், கோளரங்கில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
அறிவியல் மைய கோளரங்கம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு அறிவியல் படவிளக்க காட்சி நடைபெறுகிறது.
நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் கடந்த சில நாள்களாக கோளரங்கம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம் போல் படவிளக்கக் காட்சிகள் காண்பிக்கப்படும்.
No comments:
Post a Comment