ஆசிரியர் பணியில் அப்துல்கலாமின் வாழ்க்கை மற்றும் அறிவுரைகளை முன்னுதாரணமாக கொண்டு மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும் என்றார் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியை ரமணி.
கரூர் பண்டுதகாரன்புதூர் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7-வது பட்டமளிப்பு விழாவில் 205 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
"ஆசிரியர் பணி மகத்தானது. இந்தப் பணியில் ஈடுபடும் உங்களுக்கு அர்ப்பணிப்பு குணம் மிக அவசியம். நாட்டின் எதிர்கால நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. உங்களது செயல்கள் அனைத்தும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் வாழ்க்கையையும், அறிவுரைகளையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம், விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்குவது உங்கள் கையில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக செயலர் கண்ணன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன் முன்னிலை வகித்தார். பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில் கரூர் அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடேசன் வாழ்த்தினார்.
அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஏனோக் ஜெபசிங் பெட்போர்டு ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment