பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து, சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் வசதிக்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஜூலை, 31ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடியும்.
இந்த ஆண்டு, 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, சமீபத்தில் தான் தேர்வு முடிவுகள் வந்தன. இதில் வெற்றி பெற்ற பலர், பிளஸ் 1 வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். அதனால், மாணவர் சேர்க்கை கால வரம்பு, செப்டம்பர், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர்
கண்ணப்பன் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment