சென்னை:''மூத்த குடிமக்கள் காப்பீட்டு திட்டத்தில், வங்கிகளை விட அதிக வட்டியில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது,'' என, எல்.ஐ.சி., தென் மண்டல மேலாளர் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவில், 10 சதவீதம் பேர் மட்டும் ஓய்வூதியம் பெறுவதால், பலர் முதுமை காலத்தில் வறுமையில் வாழ்கின்றனர். எனவே, 60 வயது கடந்தவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில், எல்.ஐ.சி.,யில், 'வரிஷ்த பென்ஷன் பீமா யோஜனா' என்ற, காப்பீட்டு திட்டம் உள்ளது. இதில், ஒரே பிரீமியமாக, 66 ஆயிரத்து, 665 ரூபாய் செலுத்தினால், மாதம், 500 ரூபாய்; 6.66 லட்சம் ரூபாய் கட்டினால், 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு, வங்கிகளில் வழங்கப்படுவதை விட, 9.38 சதவீதம் என்ற அளவில் அதிக வட்டி வழங்கப்படுகிறது.
இந்த காப்பீட்டை எடுத்த பாலிசிதாரர் இறந்து விட்டால், முழு பிரீமிய தொகையும் அவரின், வாரிசிடம் ஒப்படைக்கப்படும். கடந்த சுதந்திர தினத்தன்று துவக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டு திட்டம், அடுத்த மாதம், 14ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன், இத்திட்டத்தில் சேரலாம். மூத்த குடிமக்கள் காப்பீட்டு திட்டத்தில், இதுவரை, 7,726 பேர் சேர்ந்து உள்ளனர். அவர்களிடம், 239 கோடி ரூபாய் பிரீமியம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment