பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூன்றாம் நாள் முடிவில் 9,170 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. ஜூலை 28-ஆம் தேதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. ஜூலை 28-ஆம் தேதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
முதல் நாளில் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை என மொத்தம் 2,017 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 1,256 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை பெற்றுச் சென்றனர்.
இரண்டாம் நாளில் 3,564 பேர், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 4,350 பேர் என மொத்தம் 9,170 பேர் இடங்களை தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கை கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
கலந்தாய்வு தொடங்கி மூன்று நாள்கள் முடிந்துள்ள நிலையில் இசிஇ பாடப் பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 1,873 பேர் இந்தப் பிரிவையும், 1,557 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 1,195 பேர் சிஎஸ்இ பிரிவையும், 1,030 பேர் இஇஇ பிரிவையும், 826 பேர் சிவில் பிரிவையும் தேர்வு செய்திருக்கின்றனர். இன்னும் 1 லட்சத்து 83 ஆயிரத்து 905 இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் மவுசு குறைகிறது: இதுவரை சுமார் 11 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 2,606 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 69 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துள்ளனர். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து ஆனால், கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைந்து வருவதையே காட்டுகிறது என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment