பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் இரண்டாம் நாள் முடிவில் 4,820 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. ஜூலை 28 ஆம் தேதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. ஜூலை 28 ஆம் தேதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்தப் பிரிவின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 75 பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன.
முதல் நாளில் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை என மொத்தம் 2,017 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 1,256 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை பெற்றுச் சென்றனர். இரண்டாம் நாளான வியாழக்கிழமை 4,621 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 3,564 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். 1,772 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 42 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர். இதன் மூலம் இரண்டாம் நாள் முடிவில் 4,820 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டும் பல்கலைக்கழக துறைகளில் ஒன்றான கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. எஸ்சிஏ பிரிவினருக்கான ஒரே ஒரு இடம் மட்டுமே இப்போது உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பி.இ. சிவில் பிரிவில் 3 இடங்கள் மட்டும் உள்ளன.
இசிஇ பிரிவில் 17 இடங்களும், சிஎஸ்இ பிரிவில் 25 இடங்களும், கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் தமிழ் வழி பி.இ. மெக்கானிக்கல் படிப்பை ஒரு மாணவர் தேர்வு செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment