சென்னை :அண்ணா பல்கலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தொழிற்கல்வி மாணவர்களுக்கு இன்றுடன் கவுன்சிலிங் முடிகிறது.
அண்ணா பல்கலை இன்ஜி., பொது கவுன்சிலிங் கடந்த, 28ம் தேதி முடிந்தது. பின், 3,000 மாணவர்களுக்கான தொழிற்கல்வி கவுன்சிலிங் நேற்று முன் தினம் துவங்கியது.
முதல் நாளில், 1,128 பேர் அழைக்கப்பட்டனர்; 161 பேர் வரவில்லை; 17 பேர் விரும்பிய பாடம் கிடைக்காததால், இடங்களை திருப்பி அளித்தனர். 950 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நேற்று நடக்க இருந்த, இரண்டாம் நாள் கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டு, இன்று நடக்கிறது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், எட்டு இடங்கள், சுயநிதிக் கல்லுாரிகளில், 5,726 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், இன்ஜி., படிப்பில் சேர, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. மாணவர் தங்கள் சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களுடன் பல்கலைக்கு நேரில் செல்ல வேண்டும்.
பொதுக் கவுன்சிலிங்கில் அருந்ததியர் ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு, தலித் மாணவர்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங்கும் நாளை நடக்கும் என்று, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதில், கூடுதலாக, 3,000 இடங்கள் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிவு வாரியாக விபரம்:
பொது கவுன்சிலிங்கில் நிரம்பிய மொத்த இடங்கள் - 1,01,620
முதல் தலைமுறை பட்டதாரி - 55, 608
மாணவர் - 62, 970
மாணவியர் - 38, 650
மெக்கானிக்கல் - 41,806; மாணவியர் - 366
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ( இ.சி.இ.,) - 38, 423; மாணவியர் - 12,264
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 30,723; மாணவியர் - 8,908
சிவில் - 28,000
எலக்ட்ரிக்கல் - 25,000
ஐ.டி.,பிரிவு - 10,950
ஏரோநாட்டிக்கல் - 2,623
ஆட்டோமொபைல் - 2,455
பயோ டெக்னாலஜி - 1,357,
மெக்கானிக்கல் தமிழ் -719
சிவில் தமிழ் - 2,623
No comments:
Post a Comment