காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் 2 தேர்வில் 75 சதவீத தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி., குரூப் 2 தேர்வு ஞாயற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,282 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 22, தாம்பரத்தில் 19, செங்கல்பட்டில் 9 என 50 மையங்களில் 93 அறைகளில் தேர்வு நடைபெற்றது.

தேர்வர்களுக்கு வசதியாக தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு தமிழ்நாடு அரசு பேருந்து, சென்னை மாநகர பேருந்து ஆகியன சிறப்பு பேருந்துகளை இயக்கின. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு வசதியாக குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும் தேர்வை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 15 பறக்கும் படையினர் தேர்வு மையத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேர்வுக்கு தகுதியானவர்களில் பல்வேறு காரணங்களாக 7,312 பேர் தேர்வு பங்கேற்கவில்லை.
21,970 பேர் மட்டும் தேர்வு பங்குபெற்றனர். இது 75 சதவீதமாகும். மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் காஞ்சிபுரத்தில் பி.எஸ்.சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment