Pages

Saturday, June 1, 2019

கோடை விடுமுறை முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு

Image result for school reopen
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான, 50 நாட்கள் கோடை விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. நாளை, புதிய கல்வி ஆண்டுக்காகபள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.


2018 - 19ம் கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, ஏப்ரலில் முடிந்தன.தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, ஏப்., 13லும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, ஏப்., 12லும் தேர்வுகள் முடிந்தன.பின், ஒன்றரை மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. கடும் வெயில் காரணமாக, கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், 50 நாட்கள் கோடை விடுமுறை, இன்றுடன் நிறைவு பெறுகிறது. புதிய கல்வி ஆண்டுக்காக, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வுக்கு புதிய பாடத்திட்டம் அமலாகிறது. அதேபோல, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலுக்கு வருகிறது.மற்ற வகுப்புகளுக்கு, 2018ல், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்து விட்டது. புதிய பாடத்திட்ட பாடங்களை விரைந்து நடத்தும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.

No comments:

Post a Comment