இரண்டு கட்டங்களாக, இந்த தேர்வு நடத்தப்படும். மாநில அளவில், ஒரு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தேசிய அளவிலான தேர்வில் பங்கேற்கலாம். இதில், 1,000 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்படுவர்.அவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்புகள் வரை, அரசின் சார்பில், ஆண்டு மற்றும் மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும். இந்தாண்டு முதல், உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை, 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு படித்து, தேசிய திறன் தேர்வில், முன்னிலை பெறும், 2,000 பேர், கல்வி உதவி தொகை பெற தகுதியுடையவர்கள் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment