Pages

Friday, May 10, 2019

தபால் ஓட்டுகள்: ஆசிரியர் சங்கம் மனு

சென்னை:'லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, இதுவரை தபால் ஓட்டுகள் கிடைக்கவில்லை' என, தலைமை தேர்தல் அதிகாரியிடம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர், தியாகராஜன் மனு அளித்துள்ளார்.


மனுவில், அவர் கூறியிருப்பதாவது:ஏப்., 18ல் நடந்த லோக்சபா தேர்தல் பணியில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அவர்களில் பலருக்கு, இன்னும் தபால் ஓட்டு வழங்கப்படாமல் உள்ளது. சிலருக்கு தபால் ஓட்டு, வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டு, முகவரி தவறு என, திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள், தாசில்தாரிடம் சென்று, தபால் ஓட்டு வழங்கும்படி முறையிட்டு வருகின்றனர்; அதற்கு பலன் கிடைக்கவில்லை.

சில இடங்களில், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, தபால் ஓட்டு பெட்டிகள், 'சீல்' இடப்படாமல் இருந்தன. இதனால் பலர், தங்கள் தபால் ஓட்டுகளை செலுத்தாமல் உள்ளனர். தற்போது, 'தபால் ஓட்டுகளை, தபாலில் தான் செலுத்த வேண்டும்' என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, முன்பிருந்த முறைப்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில், தபால் ஓட்டுகளை செலுத்த, ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment