Pages

Friday, May 17, 2019

கல்வி சேனலை ஒளிபரப்ப தீவிரம்

மதுரை, ''தமிழக கல்வித் துறை சார்பில் துவங்கப்படும், கல்வி சேனல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவுற்று, 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது,'' என, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், நாகராஜமுருகன் தெரிவித்தார்.மதுரையில், 'நமது' நிருபரிடம் அவர் கூறியதாவது:மாநிலத்தில், கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு எனும், 'எமிஸ்' பதிவேற்றப் பணிகள், 90 சதவீதம் முடிவுற்றது.இக்கல்வியாண்டு முதல், 'எமிஸ்' மூலமே பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மாணவரின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில், துவங்க உள்ள கல்வி சேனல் பணிகள் நிறைவுற்றன. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் எட்டாவது தளத்தில், நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேவையான காட்சியரங்கு, ஒளிப்பதிவு கூடம், நவீன தொழில்நுட்ப சாதனங்கள், தயார் நிலையில் உள்ளன.இதன்மூலம், கற்றல் மற்றும் மாணவர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள், 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும்.காலை, 5:30 மணிக்கு, 'குறளின்குரல்' என்ற தலைப்பில், திருக்குறள் பற்றிய விளக்க உரையுடன் நிகழ்ச்சி துவங்கி, பாடங்கள் தொடர்பான அனிமேஷன் விளக்கப் படம், கல்வித் துறை முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும், 'நாள் குறிப்பு', உட்பட, 30 தலைப்புகளில் முதற்கட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.அரசு செட்டாப் பாக்ஸில், 200வது சேனலாக உள்ளது. தமிழகத்தில், 53 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் இச்சேனலை மாணவர்கள் பார்க்கும் வகையில், கேபிள் இணைக்கும் பணிகள் நடக்கின்றன. மே 23க்கு பின் சேனல் துவக்க விழா நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment