Pages

Monday, December 10, 2018

தமிழ் படித்தால் ரூ.2,000 உதவித் தொகை

சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முது கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
சென்னை, தரமணியில் உள்ள, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், தமிழ் முதுகலையில் திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ் சுவடியியல், பதிப்பியல் உள்ளிட்ட, பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.தமிழ் முதுகலை பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, மாணவர்களுக்கு, மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துஉள்ளது.

No comments:

Post a Comment