Pages

Thursday, November 29, 2018

'சம்பள பாக்கி வழங்கப்படும்'

சென்னை, 'சுயநிதி பள்ளிகளுக்கான, கட்டண கமிட்டி ஊழியர்களுக்கு, சம்பள பாக்கி ஏதுமில்லை' என, நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக சுயநிதி பள்ளி கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது.இந்நிலையில், கல்விக் கட்டண கமிட்டி தலைவர், சிறப்பு அதிகாரி மற்றும் கணினி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், எட்டு மாதங்களாக, சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என, புகார் எழுந்தது.இதற்கு, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தரப்பில், 'ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment