Pages

Sunday, June 17, 2018

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நடப்புக் கல்வியாண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீங்ழ்ற்.ர்ழ்ஞ்) ஜூன் 18 முதல் 30 வரை வெளியிடப்பட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. மாணவர்கள் உரிய விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்த பின்பு சேமிப்பு பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் கட்டணத்தை செலுத்திய பிறகுதான் அவர்களின் விண்ணப்பம் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் அளிக்கும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். கலந்தாய்வின்போது அவை சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்த பின்னரே சேர்க்கை இறுதிசெய்யப்படும். 
விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, சிறப்பு ஒதுக்கீடு போன்ற விவரங்களை ww.tnscert.org என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என எஸ்சிஇஆர்டி இயக்குநர் அறிவொளி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment