Pages

Saturday, August 13, 2016

'புதிய கல்வி கொள்கையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்'

ஐதராபாத்: ''நாட்டின் புதிய கல்விக் கொள்கை, பொறுப்புணர்வு, ஆராய்ச்சி, நவீனம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது; இங்குள்ள ஐதராபாத்தில், ஒரு பள்ளியில், மாணவர்களுடன் கலந்துரையாடிய, மத்திய
அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: நாட்டின் புதிய கல்விக் கொள்கை, பொறுப்புணர்வு, ஆராய்ச்சி, நவீனம், தரம், சமபங்கு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்படும். அரசியல் சாசன ஷரத்துக்களில் மாற்றங்கள் செய்யப்படாமல், இக்கொள்கை அமையும். நான், சிறுவனாக இருந்தபோது, செய்தி பத்திரிகைகள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை; அதனால், பக்கத்து வீடுகளுக்கு சென்று பத்திரிகைகளை படித்தேன். எனக்கு, 10 வயதானபோது, ஆரம்ப நிலை ஆசிரியையான என் தாயும், நானும், படிக்காதோருக்கு பாடம் சொல்லிக் கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment