Pages

Monday, July 25, 2016

மனோன்மணியம் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு ஆள்தேர்வு

சென்னை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, நேரடி நியமனம் செய்யப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், நில அமைப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் காலிஇடங்கள் உள்ளன.

இவற்றில், உதவி பேராசிரியர், பேராசிரியர் போன்ற பதவி களில், 34 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியுள்ளவர்கள், ஆக., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை, பல்கலையின், www.msuniv.ac.in இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment