காரைக்குடி: 'தினமலர்' பட்டம் இதழ் சிறுவர்களின் அறிவாற்றலை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தகவல்களை தாங்கி வருகிறது, என அரசு பள்ளி மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். 'தினமலர்' நாளிதழோடு திங்கள் தோறும் இணைப்பாக வெளி வரும் மாணவர் இதழ் 'பட்டம்'. இதில் செய்தி அறிவோம், வெங்கியை கேளுங்கள், பொதுஅறிவு புது அறிவு, மாலுவின் டயரி, மகிழ்ச்சி அரங்கம், ஆர்ட் ரூம், விளையாட்டு, வெட்டிக்கோ ஒட்டிக்கோ உள்ளிட்ட பல்வேறு அறிவு சார்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
மாணவர்கள் திங்கள் கிழமை எதிர்பார்ப்பாக பட்டம் உள்ளது. 'பட்டம்' பொதுஅறிவை வளர்க்கிறது. வாரந்தோறும் இதை வாசித்தால் பொது அறிவில் சிறந்து விளங்கலாம்,' என்கின்றனர், காரைக்குடி வ.சூரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள். திங்கட்கிழமை தங்களின் முதல் பாடவேளையை பட்டம் இதழுக்காக ஒதுக்கி படிக்கின்றனர்.
அபிநயா, (எட்டாம் வகுப்பு): ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது 'தினமலர்' பட்டம். ஓவியம், புதிர் கணக்குகள், கடல் கடந்த கதைகள், விளையாட்டு செய்திகள் என பல்வேறு தகவல்கள் மிகுந்த பயனுள்ளவை. ஒவ்வொரு வாரமும் இதை வாங்கி படிக்க உறுதி பூண்டுள்ளோம்.
வீரஹரிகரன், (எட்டாம் வகுப்பு): நோய்கள், எதனால் வருகிறது என்பதை பட்டம் இதழை பார்த்தே தெரிந்து கொண்டேன். மாணவர்களின் கேள்விக்கு மத்திய அரசு விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் அளிக்கும் பதில்கள் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டவை.
தலைமை ஆசிரியர் சந்திரன்: ஆசிரியர்களும் இன்று படித்து தன்னை தானே 'அப்டேட்' செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கு பட்டம் இதழ் உற்ற துணை புரிகிறது. பட்டம் இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதில் உள்ளவற்றை படித்து, மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன்.
நம்மால் தீர்க்க முடியாத பல விஷயங்களுக்கு பட்டம் தீர்வு தருகிறது. ஹெல்த் அட்வைஸ், புதிர் ஓவியங்கள், வாசித்தல் திறனை மேம்படுத்தும் படங்களுடன் கூடிய கதைகள், மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment