Pages

Saturday, July 23, 2016

எம்.இ., - எம்.டெக்., 'அட்மிஷன்' அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் முதுநிலை படிப்பான, எம்.இ., - எம்.டெக்., போன்றவற்றில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. இன்ஜி., கல்லுாரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, 'டான்செட்' எனப்படும், பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வின் படி, மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. ஜூலை, 31 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 'எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment