Pages

Tuesday, July 5, 2016

பள்ளிக்குள் புகுந்த பாம்பு: மாணவர்கள் அலறி ஓட்டம்

ஆம்பூர் அருகே பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் வகுப்பறையை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

 மாதனூர் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சியில் சின்ன கொம்மேஸ்வரம் கிராமத்தில் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓடு வேய்ந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி அறைக்குள் சென்று தங்களது பாட புத்தக பையை வைத்து விட்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அலறியடித்து வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார்கள். 


இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்தனர்.  பள்ளிக்கு வந்த அப்பகுதி மக்கள் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பைப் பிடித்து அருகில் உள்ள மலைப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இருப்பினும் அச்சம் காரணமாக ஆசிரியர், மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லவில்லை. மரத்தடியிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment