Pages

Saturday, July 23, 2016

பிற மாநில மாணவர்களுக்கு அண்ணா பல்கலையில் இடம்

அண்ணா பல்கலையின் கல்லுாரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு, 48 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதற்கான, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையின் துறை கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மற்றும் 'ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்' ஆகியவற்றில், சில இடங்கள் மட்டும், வெளி மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மொத்தம், 48 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில், கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றில், தலா, 17 இடங்கள்; 'ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்' கல்லுாரியில், இரு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதேபோல், கல்லுாரிகளில் ஒதுக்கப்பட உள்ள பாடப்பிரிவு பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment