தேனி: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறியதாவது: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மாவட்ட கல்வியியல் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் விரிவுரையாளர், இளம் விரிவுரையாளர் மற்றும் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதற்கான போட்டி தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் ஜூலை 15 முதல் 30ம் தேதி வரை வினியோகிக்கப்படவுள்ளது. அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்ளுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 250, மற்றவர்களுக்கு ரூ. 500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30ம் தேதி மாலை 6.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment