Pages

Wednesday, July 6, 2016

கல்வி அலுவலகத்தில் பணிப்பதிவேடு மாயம்

அந்தியூர்: கல்வி அலுவலகத்தில், 4 தலைமை ஆசிரியர்களின் பணிப்பதிவேடு காணவில்லை என்று, அந்தியூர் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. அந்தியூரில், பர்கூர் முக்கிய சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. அந்தியூர் ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை தலைமை ஆசிரியை தங்கம், சாவித்திரி, சரஸ்வதி மற்றும் தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் ஆகியோரின் பணிப்பதிவேடு காணவில்லை என்று கூறி, உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன், அந்தியூர் போலீசில் புகார் தந்துள்ளார். இதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment