Pages

Monday, July 4, 2016

என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம்? கல்வி ஆலோசகர் விளக்கம்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என ஆலோசனை தரும், 'தினமலர்' நாளிதழின் நேரடி கேள்வி, பதில் நிகழ்ச்சியில், இன்று, கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.

உயர்கல்வி எதிர்காலம் குறித்த தகவல்கள், 'தினமலர்' நாளிதழின் இணையதளம் மூலம் நேரடி கேள்வி, பதில் நிகழ்ச்சியாக தினமும் நடத்தப்படுகிறது.

கேள்விக்கு பதில் : இந்த நிகழ்ச்சியில், 'உயர்கல்வியில் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம்' என, இன்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர், பெற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

இணையதளத்தில்...: இன்று காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை, 95001 17711 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் போனில் விளக்கம் பெறலாம்.
இந்த நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழின், edu.dinamalar.com இணையதளத்தில் ஒளிபரப்பாகும்.

No comments:

Post a Comment