Pages

Saturday, July 9, 2016

பி.சி., எம்.பி.சி. வகுப்பு கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பயிலும்மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற, பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வஏண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அவரவர் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்கலாம். வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றைக் குறிப்பிடுவது அவசியம்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். மேலும்  இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment