Pages

Wednesday, July 6, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது தமிழக அரசு கவலையளிக்கிறது.


 மத்திய அரசு உத்தரவின்படி, 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேர்வை நடத்தாமல் இருப்பது வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள இளைஞர்களின் வாழ்வை இருள் சூழ வைத்துள்ளது.

 மேலும், பள்ளிக் கல்வித் துறையில் 60 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்கள், 100-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அதே அளவிலான மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது கல்வித் துறையைப் பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment