Pages

Wednesday, July 13, 2016

பழைய பென்ஷன் திட்டம்: அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள், கடந்த பிப்., 10ல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டம் 10 நாட்கள் நீடித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பிப்., 19ல் வெளியிட்ட, 110வதுவிதியின் கீழான அறிவிப்பில், 'அரசு ஊழியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய, வல்லுனர் குழு அமைக்கப்படும்' என்று அறிவித்தார். இதனால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில், பிப்., 26ல்,குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, ஐந்து மாதங்கள் ஆகியும், இன்னும் அந்தக் குழு, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை.முதல்வர் ஜெயலலிதா, அரசு அலுவலர்களின் இந்த முக்கிய பிரச்னை குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழைய ஓய்வூதியதிட்டத்தை தொடருவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment