Pages

Wednesday, July 13, 2016

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஊரக தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2016-17 ஆம் கல்வி ஆண்டில் நகராட்சிகள் நீங்கலாக, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரரின் பெற்றோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். தேசிய திறனாய்வுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள், 50 மாணவிகள் உள்பட மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூ. 1,000 வீதம் வழங்கப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment