Pages

Thursday, July 14, 2016

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு: கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு 8 ஆம் வகுப்பு பயிலும் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 இதுகுறித்து  திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.செ.சுபாஷினி தெரிவித்துள்ளது:


 திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016- 17 கல்வி ஆண்டில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.5, சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.10 கட்டணத்துடன், ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவர்களுக்கு (50 மாணவிகள், 50 மாணவர்கள்) 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிப்பு உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.1000 வீதம் வழங்கப்படும்.

 நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment