Pages

Tuesday, July 19, 2016

சி.ஏ., தேர்வில் 597 மதிப்பெண் : சென்னை மாணவி சாதனை

சென்னை: சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில், 4வது இடம் பிடித்து, சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவிலான சி.ஏ., தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், சென்னையை சேர்ந்த ஷில்பா கே.மூர்த்தி, 597 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், நான்காவது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். இவர், பள்ளியில் படிக்கும்போதே, பல்வேறு தேர்வுகளிலும், அதிக மதிப்பெண் பெற்று வந்துள்ளார். 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

தற்போது, சி.ஏ., நுழைவு தேர்வில், தேசிய அளவில் 10வது இடமும், சி.எஸ்., (கம்பெனி செகரெட்டரி) இன்டர்மீடியட் தேர்வில், 3வது இடமும் பெற்றார். மே மாதம் நடந்த சி.ஏ., தேர்வில், இந்திய அளவில் 597 மதிப்பெண்கள் பெற்று, 4வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த தேர்வில், அகில இந்திய அளவில் அதிகம் மதிப்பெண் எடுத்துள்ள பெண் மாணவி, இவரே.
கம்பெனி சட்டங்கள், வரி சட்டங்கள், பட்டையக்கணக்கு ஆகியவற்றில் அதிக ஆர்வம் உள்ளதாக ஷில்பா மூர்த்தி தெரிவித்தார்.

No comments:

Post a Comment