தகவல் தொழல்நுட்பவியல் துறை சார்பில் நடப்பாண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தகவல் தொழில் நுட்பம்- சேவைப் பிரிவுகளில் சென்னை மாநகரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு முன்ணனி நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், மென்பொருள் ஏற்றுமதியில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவீதம் வரை வளர்ச்சியடைந்து வருகிறது. மென்பொருள் ஏற்றுமதி அளவு நிகழாண்டில் ரூ. 95 ஆயிரம் கோடி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சமவாய்ப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, நடப்பாண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதிநிலை அறிக்கையில் ரூ.890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment