உயர் கல்வித் துறைக்கு 2016-17 திருத்திய வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,679.01 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக தமிழக உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 44.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், குறிப்பாக பெண்கள் எளிதாக உயர் கல்வியின் பயனைப் பெறவும் தேவையான பகுதிகளில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்.
கல்வியில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த, 2016-17 ஆம் ஆண்டுக்கு ரூ. 582.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 152.97 கோடி உள்பட, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக ரூ. 357.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment