Pages

Wednesday, July 13, 2016

புரிதலை மேம்படுத்த 23-இல் புத்தாக்கப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி குறு வள மைய அளவில் ஜூலை 23-இல் நடைபெறவுள்ளது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குக் குறு, வள மைய அளவில் ஒருநாள் பயிற்சியாக புரிதலை மேம்படுத்த மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டது.


மாவட்ட அளவிலான பயிற்சிகளைத் தொடர்ந்து குறுவள மைய அளவில் பயிற்சிகள் நடத்த வேண்டும். எனவே மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்துக்கான பயிற்சிக்

கையேடுகள் பெற்ற பின் நடத்தலாம்.

அதைத் தொடர்ந்,து குறு வள மைய அளவிலான பயிற்சியை ஜூலை 23-இல் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment