ஈரோடு அரசு தொழிற்பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினரில் 99.5 முதல் 19.5 கட் ஆப் மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு ஜூலை 12-ஆம் தேதியும்,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 99.5 முதல் 67 சதவீத கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினருக்கு ஜூலை 13-ஆம் தேதியும், 67 முதல் 55.5 சதவீத கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினருக்கு ஜூலை 14-ஆம் தேதியும், 55.5 முதல் 35 சதவீத கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஜூலை 15-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment