சென்னை : தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில், சென்னை, மதுரை மற்றும் நாகர்கோவிலில் உள்ள ஆறு கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகள் உள்ளன.
அரசில், 356 இடங்களும், 21 சுய நிதி கல்லூரிகளில், 1,000 இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், ஆறு அரசு இந்திய மருத்துவ முறை கல்லுாரிகளில், இன்று முதல், ஜூலை, 28 வரை வழங்கப்படுகின்றன. 'பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 29க்குள் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment