விருதுநகர் மாவட்ட அனைத்துப் பள்ளி 14 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் ஆக.18-இல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா மேலும் கூறியதாவது: இப் போட்டிகளில் தடகளம், கபடி, கோ-கோ போட்டிகளுக்கு ஆண், பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். குழு
போட்டிக்கு ஒரு பள்ளியில் இருந்து ஒரு அணி மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பபடும். மேலும் 100மீ, 200மீ, 400மீ, 600மீ மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் நடைபெறும். இப்போட்டியில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 14 வயதிற்குள்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்றார்.
No comments:
Post a Comment