தமிழக மோட்டார் வாகன சட்ட விதி, 417-ஏயின்படி, இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, 'ஹெல்மெட்' அணிவதில், விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

'இரு சக்கர வாகனங்களில் செல்வோர், ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் (பெண்கள், சிறுவர்கள் உட்பட), ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், நேற்று முதல் இந்த உத்தரவு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனால், ஹெல்மெட் அணியாதவர்களிடம், ஆவணங்கள் பறிமுதல், அபராதம், வாகனம் பறிமுதல் என, போக்குவரத்து போலீசார் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மோட்டார் வாகன சட்டம், 129ன் படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு என, பிரத்யேகமாக எந்தவொரு விதியும் வகுக்கப்படவில்லை. மாறாக, இதர குற்றங்கள் உட்பட, தவறு இழைப்பவர்களுக்கு என, மோட்டார் வாகன சட்டம் - 177ல் விதிமுறைகள் உள்ளன. இதன்படி, ஹெல்மெட் இன்றி, இரு சக்கர வாகன ஓட்டுபவருக்கு முதலில், 100 ரூபாய்; தொடர்ந்து விதியை மீறினால், 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.மத்திய மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி, தமிழக மோட்டார் வாகன விதிகள் கொண்டு வரப்பட்டு, அரசு இதழில் வெளியிடப்பட்டன. இதில் மொத்தம், 431 விதிகள் உள்ளன. இதில், 417(ஏ) விதிப்படி,
1புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தலைப்பாகை அணிந்திருக்கும், மெய்வழிச்சாலை உறுப்பிகள் ஹெல்மெட் அணிய தேவையில்லை.
2வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்லும், அனைத்து வயது பெண்கள் மற்றும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஹெல்மெட் அணிய தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம், அதையொட்டி, தமிழக அரசு உருவாக்கி உள்ள மோட்டார் வாகன விதியில், இரு சக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.ஆனால், 'இதற்கு எதிராக, இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் அனைவரும், ஹெல்மெட் அணிய வேண்டும்' என, புது சட்டத்தை வகுப்பது போல், தீர்ப்புஇருக்கக் கூடாது. 'ஹெல்மெட் கட்டாயம் என்பதற்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. அச்சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை; முறையாக அமல்படுத்துங்கள்' என்று தான், நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்க வேண்டும்
சந்துரு,
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி
ஹெல்மெட் போட்டபடி, இருசக்கர வாகனத்தில், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது சிரமம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஹெல்மெட் வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர். ஹெல்மெட் அணியும் பெண்கள், அதை கழற்றும் போது நகைகள் சேதமடையும்.
ஜெயப்பிரியா,
முகப்பேர்
ஹெல்மெட் அணிவது, பாதுகாப்பு தான். ஆனால், பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்பினால், சரியாக கேட்பதில்லை. வாகனத்தில் பக்கவாட்டு கண்ணாடி இல்லாவிட்டால், ஹெல்மெட் அணிந்து ஓட்டுவது சிரமம். இதில், பெண்களுக்கு விலக்கு அளிக்கலாம்
No comments:
Post a Comment